Graphics Design Trends 2024 : இந்த ஆண்டில் கிராபிக்ஸ் டிசைனை பொறுத்தவரையில் இருபதுக்கும் மேற்பட்ட பாணி கிராபிக்ஸ் டிசைனிங் வடிவமைப்புகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.அவற்றில் என்னை கவர்ந்த ஐந்து பாணி வடிவமைப்புகள் குறித்து இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

- Vintage Minimalism : விண்டேஜ் மினிமலிசம் என்பது எளிமையான வடிவமைப்புகளை உருவாக்க விண்டேஜ் வண்ணங்களை பயன்படுத்துவதாகும்.விண்டேஜ் மினிமலிசம் என்பது 2024 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நவீன பாணியாகும். நாம் நமது பின்னோக்கிய பயணத்தை நிகழ்த்துவது போல் பழைய வடிவங்களை மீட்டெடுக்கவும்,அவற்றை மீண்டும் நினைவு கூறும் விதமாகவும் இந்த பாணி வடிவமைப்பு இருக்கலாம்.இது மினிமலிசத்தின் எளிய வடிவமைப்பு கூறுகளின் தன்மையை,பழைய விண்டேஜ் தரவுகளின் அரவணைப்பை ,அழகியல் அம்சங்களைக் கருத்தில் கொண்ட ஒரு முழுமையான வடிமைப்பு அணுகுமுறையாக காணப்படுகிறது
2.Anti-Design : புதிர் தன்மையுடன் கூடிய மாடர்னிசம் பாணியிலான இருளின் வண்ணக் கலவையின் அவதானிப்பில்,ஒழுங்கற்ற வடிவங்களில் சேர்க்கையுடன்,தோற்றங்களில் வித்தியாச உருவமைப்பு கொண்ட பாண்ட்கள் கொண்டு இவை உருவாக்கப்படுகிறது.பல்வேறு அளவுகளின் எழுத்துருக்கள்,ஒருங்கிணைவு அற்ற இடைவெளி மற்றும் பக்கவாட்டு கலவை ஆகியவற்றின் மூலம் கிளர்ச்சி மனப்பான்மையை வடிவமைப்பில் உருவாக்குகிறது.மாடர்ன் ஆர்ட்,கலை விழாக்கள் நாடக அரங்கம் கலை விழாக்கள் போன்ற படைப்புத் துறை சார்ந்த வடிவமைப்புகளுக்கு இந்த பாணி சிறப்பாகச் செயல்படுகிறது.
3.Illustration Logo Mascots : 2024 இல் மாஸ்காட் லோகோ வடிவமைப்பு பெரிய அளவில் உயர்வைக் காணப் போகிறது.மாஸ்காட் லோகோ வடிவமைப்பு என்பது வாடிக்கையாளருக்கு பிராண்ட் குறித்த கதையை உணர்ந்து கொள்ளும் வகையில் Illustration முறையில் வடிவமைக்கபடும் இந்த வகையிலான டிசைன் என்பது பிராண்டின் விளக்கம் மற்றும் பிராண்டிங் அம்சங்களுடன் மதிப்பு கூட்டும் வகையில் வடிவமைக்கப்படும் கலை வடிவம் ஆகும்.ஒரு பிராண்டின் அடையாளம் மற்றும் மதிப்புகளின் சாரத்தை உள்ளடக்கி,திறமையான விளக்க நுட்பங்களைப் பயன்படுத்தி Illustration வடிவமைப்பாளர்களால் இந்த Mascots லோகோக்கள் வடிவமைக்கப்படுகிறது.
- Digital Collage : டிஜிட்டல் Collage என்பது இமேஜ் எடிட்டிங் மென்பொருளைப் பயன்படுத்தி வெவ்வேறு டிஜிட்டல் படங்களை ஒன்றிணைத்து ஒரு ஒருங்கிணைந்த கலவையாக உருவாக்கப்படும் கலைப்படைப்பாகும். இந்த டிஜிட்டல் கலை வடிவம் பாரம்பரிய படத்தொகுப்பின் வளர்ச்சியாக, காட்சி உருவை உருவாக்க காகிதத்தை வெட்டி வடிவத்தின் மேற்பரப்பில் ஒட்டுவதை போன்ற செயல்முறையை உள்ளடக்கி உள்ளது .
- Abstract gradients and color Transitions : Gradients டிசைன் என்பது இரு வேறு வண்ணங்களுக்கு இடையில் படிப்படியாக அடுக்கடுக்காக பல்வேறு பிரதிபலிப்பில் சாயலை ஒத்த வண்ணங்களை கேன்வாஸில் உருவாக்குகிறது.அவை நாம் தேர்வு செய்யும் நிறங்களின் வெவ்வேறு சாயல்களுக்கு இடையிலோ அல்லது முற்றிலும் மாறுபட்ட நிழல்களின் கலவையாகவோ தோற்றம் அளிக்ககூடும்.
ஆனால் 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்டுள்ள இந்த புதிய வகை Abstract gradients and color transitions டிசைன் மாற்றம் உங்கள் காட்சியில் வழக்கமாக ஏற்படுத்தும் வண்ண மாற்றங்களை போல் இல்லாமல் அடர்ந்த ,பிரகாசமான வண்ணங்களின் கலவையை பிரதிபலிப்பதன் மூலம் மிகவும் நவீனமான உணர்வை ஏற்படுத்துகிறது.