பெண்டாவார்ட் விருதுகள் என்பது உலகளவில் சிறந்த பேக்கேஜ்ஜிங் வடிவமைப்புக்காக வருடந்தோறும் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும் .ஆண்டுதோறும் சிறந்த பேக்கேஜ்ஜிங் வடிவமைப்புக்காக வழங்கப்படும் இந்த பெண்டாவார்ட் விருது இந்த 2024 ஆண்டு லண்டனை சேர்ந்த எடிபிள் ஸ்நாக் பார் ஒன்றின் ரேப்பர் வடிவமைப்பிற்கு கிடைத்துள்ளது.

ஒன் குட் திங்ஸ் ஓட்ஸ் மற்றும் புரோட்டீன் பார்ஸ்நாக் பார்களுக்காக,உண்ணக்கூடிய வகையில் வடிக்கப்பட்ட அதன் ரேப்பர்கள் வடிவமைப்பு ,இந்த வருடத்திற்கான பென்டாவார்டில் சிறந்த பரிசைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்நாக் தின்பண்டத்தின் பார்கள் தேன் மெழுகு அடிப்படையிலான பூச்சு மற்றும் உண்ணக்கூடிய அரிசி காகித லேபிளைக் கொண்டுள்ளன.இதன் வெளிப்புற பேக்கேஜிங்கின் தேவையை அவசியமற்ற ஒன்றாகச் சிந்தித்து வடிவமைத்துள்ளது ஆச்சர்யமூட்டுவதாக உள்ளது.
இந்த விருதினைப் பெற்ற OGT நிறுவனத்தின் பிராண்டிங் குழு,உண்ணக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்நாக் பார் ரேப்பர் குறித்து ‘உலகெங்கும் sustainable திட்டங்களில் சுற்றுச்சூழல் நம்பிக்கைகள் உருவாக்குதல் மற்றும் சூழலியல் தொடர்பைச் சமநிலைப்படுத்துவது இன்றியமையாதது ‘ என்று தெரிவித்துள்ளது.இந்த வடிவமைப்பை மேற்கொண்ட லண்டன் டிசைனிங் ஏஜென்சியான ‘திஸ் வே அப்’ இந்த ‘ஒன் குட் திங்ஸ்’ ஓட்ஸ் மற்றும் புரோட்டீன் பார்களுக்கான லேபிள்களையும் ஒட்டுமொத்த பிராண்டையும் வடிவமைத்துள்ளது. கடந்த வெள்ளியன்று இந்த ஆண்டு பென்டாவர்ட்ஸில் சிறந்த வடிவமைப்பு விருது பட்டியல் வெளியாகி உலகளாவிய பேக்கேஜிங் வடிவமைப்பில் சிறந்தவை என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவித்துள்ளது.