ISTD (International Society of Typographic Designers) விருதுகள் என்பது
ஆண்டுதோறும் சிறந்த கிராபிக் டிசைனருக்கு வழங்கப்படும் மிக சிறந்த விருதாகும் . ISTD என்பது உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த Typography கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்கள் மற்றும் மல்டி மீடியா கல்வி பயிற்சி வழங்குபவர்களால் நடத்தப்படுகிறது.உலகெங்கும் உள்ள இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைத்து வகையான Typography கலை வடிவ உருவாக்கத்திற்கும்,அதன் மீது ஆர்வத்தை தூண்டும் சூழலை உருவாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.1992-ல் முதல் நடைபெற்று வரும் ISTD இன்டர்நேஷனல் Typography அவார்ட்ஸ்,Typography வடிவமைப்பு பிரிவில்,உலகின் பல பகுதிகளில் இருந்து சிறந்த மாதிரிகளை,தரவுகளை அங்கீகாரம் செய்து,விருது வழங்கியுள்ளது.இந்த அமைப்பு Brand identities and Rebranding,Print,Motion,Digital Typography,environmentel,Packaging,Books வடிவமைப்பு சார்ந்த பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது .
1992-ல் நிறுவப்பட்ட இவ்விருதுகள், “டைபோகிராபி வடிவமைப்பு , மற்றும் டைபோகிராபிக் துறையில் புதுமையின் எல்லைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.மறைந்த வடிவமைப்பாளர் ஃப்ரெடா ஸாக் அவர்களின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வு,கடந்த வெள்ளிக்கிழமை பிரைடனில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
ISTD இன்டர்நேஷனல் டைபோகிராபிக் அவார்ட்ஸின் இந்த 2024 ஆண்டின் வெற்றியாளர்களாக இசை ஆல்பம் ஒன்றின் கவரும் வடிவமைப்புக்காகவும் , ஜெர்மன் நாடக அரங்கு நிறுவனத்திற்கு ReBrandingக்காக போஸ்டர் வடிவமைப்பு செய்தவர்களுக்கு கிடைத்துள்ளது.
லண்டனை சேர்ந்த வடிவமைப்பாளர் ஹ்யூ மில்லர்,அவர் SO/LO இசைக்குழுவின் “At the End of the World, Plant a Tree” என்ற ஆல்பத்திற்கு செய்த cover வடிவமைப்பிற்காக வழங்கப்படுகிறது.இந்த வடிவமைப்பு MuirMcNeil’s TwoBit typface எழுத்துரு முறையில் debossing and foils to overprint முறையை பயன்படுத்தி ஃபாயில்கள் மீது ஓவர்பிரிண்ட் முறையில் டிபாஸ்ஸிங் முறையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம் கவர் வடிவமைப்பு பிரதியின் மேல் பகுதியில்,கலை வடிவ அச்சு மற்றும் எரிக் மார்டினோவின் கட்டுரையை உள்ளடக்கியுள்ளது.இந்த புதிய வடிவமைப்பு உருவாக்கதில் இடம் பெற்றுள்ள வடிவங்கள் மற்றும் புதிய எழுத்துகள் ஒவ்வொன்றும் ஹ்யூ மில்லரின் வடிவமைப்பு கூறுகளை இந்த இசை ஆல்பத்தின் இன்றியமையாத அமசமாக மாற்றி விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த பரிசு ஜெர்மன் டிசைனிங் நிறுவனமான பெர்லின் Design ஸ்டுடியோ ‘Neue Gestaltung’ உடன் பகிர்ந்து வழங்கப்பட்டது.பெர்லின் ஸ்டுடியோ ‘Neue Gestaltung’ ‘மேக்டேபர்க்’ நாடக அரங்கு நிறுவனத்தின் Rebrand போஸ்டர் வடிவமைப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.இந்த வடிவமைப்பு கிரில்லி டைப் GT Ultra அழகிய எழுத்துரு மற்றும் விளையாட்டுத்தன்மையுடன் உருவாக்கப்பட்ட striking,absurd illustrations உணர்ச்சியை வெளிப்படுத்தும் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது .
Rebrand அதன் striking, absurd illustrations கற்பனையும்,நாடகத்தையும் இடைவெளி இல்லாமல் இணைக்கும் வடிவில்,இதில் இடம்பெற்றுள்ள வடிவமைப்பு காட்சிகள் பார்வையாளர்களை தங்களின் புரிந்து கொள்ளும் அம்சத்தை கூர்மை செய்வதற்கும்,சுயசிந்தனையும் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கின்றன.இந்த வடிவமைப்பின் கிரில்லிடைப் GT Ultra எழுத்துரு மூலம் வலிமையான காட்சிப் பிரயோகத்தை பார்வையார்களிடம் கட்டியெழுப்பு கூடிய வகையில் இதன் டைபோகிராபி உணர்வுவாய்ந்ததாக உள்ளது.